[prisna-google-website-translator]

ஈஸ்வரன் படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா? – அதிர்ச்சியான படக்குழு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.இப்படத்தில் சிம்பு பாம்பை தனது தோளில் சுற்றிக்கொண்டு கையில் பிடித்து நிற்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், பாம்பை கையில் பிடித்து பையில் சிம்பு போடுவது போல ஒரு வீடியோவும் வெளியானது.இது நிஜ பாம்பை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இதுவே சிம்புவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விலங்கு நல ஆர்வலர் ஒருவர் சென்னை வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். 

ஆனால், இதுபற்றி விளக்கமளித்துள்ள இயக்குனர் சுசீந்திரன் ‘சிம்பு கையில் பிடித்திருப்பது உண்மையான பாம்பு அல்ல.  படத்தில் நிஜ பாம்பு போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிராபிக்ஸாக இருந்தாலும்,  திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்த,சித்தரிக்க விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறவேண்டியது கட்டாயம். ஆனால், படக்குழு அதை செய்யவில்லை. எனவே, ஈஸ்வரன் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதற்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் படக்குழு விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply