Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

ஆபாச பட ரசிகர்களுக்கு விருந்து.. இரண்டாம் குத்து பட டீசர் வீடியோ…

e0ae86e0aeaae0aebee0ae9a e0aeaae0ae9f e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0aebf

கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது.

தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘பூம் பூம்’ பாடல் வரிகள் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.இந்த பாடலில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம் முழுக்க முழுக்க ஆபாச காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

three × five =