கடுப்பாக்கிய ஜெயம் ரவி.. முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு…

jayam ravi

கோமாளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் மார்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. அப்படத்திற்கு பின் மளமளவென படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார். லஷ்மண் இயக்கத்தில் நடித்த ‘பூமி’ படம் முடிந்துவிட்டது. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதன்பின் அஹமது மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒப்பந்தமானார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஒரு புதிய படமும், ஸ்க்ரீன் சீன் நிறுவனத்திற்கு 3 படங்களும் நடிக்க கமிட் ஆனார். ஆனால், முருகதாஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு தற்போது வரை அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை.

இந்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன் என ஜெயம் ரவி தொடர்ந்து இழுத்தடித்து வருவதால் கடுப்பான முருகதாஸ், வேறு நடிகரை நடிக்க வைக்கலாம் என கருதுகிறாராம். 2 கதாநாயகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்..

இப்படி பண்ணலமா ஜெயம் ரவி?..

%d bloggers like this: