[prisna-google-website-translator]

லீக் அவுட் ஆன தனுஷின் ஜகமே தந்திரம் கதை!

ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் தயாராகி வரும் படம் ஜகமே தந்திரம்

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் கதையை பிரபல ஹாலிவுட் நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் தயாராகி வரும் படம் ஜகமே தந்திரம்.

இந்த படத்தில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் படத்தின் கதை குறித்த முக்கிய விவரத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்த சிறப்பு பேட்டியில், ஜகமே தந்திரம் படத்தின் மையக்கருவை போட்டுடைத்துள்ளார் .

லண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க பிரபல கேங்ஸ்டரான ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவாக வலம் வரும் நடிகர் தனுஷை வேலைக்கு அமர்த்துவதாகவும், ஆனால், அவருக்கே இவர் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்பது தற்போது லீக் அவுட் ஆகியுள்ளது .

Leave a Reply