Connect with us

விமர்சனம்

சூரரைப் போற்று | போற்றலாமா ? தூற்றலாமா ?!! I SOORARAI POTRU

Published

on

e0ae9ae0af82e0aeb0e0aeb0e0af88e0aeaae0af8d e0aeaae0af8be0aeb1e0af8de0aeb1e0af81 e0aeaae0af8be0aeb1e0af8de0aeb1e0aeb2e0aebee0aeae
surarai-potru3
surarai-potru3

சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சுதா கொங்குரா இறுதிசுற்று வெற்றிக்கு பிறகு நான்கு வருட இடைவெளியில் இயக்கியிருக்கும் படம் சூரரை போற்று . சாதாரணமான ஆட்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்கிற கனவை நிஜத்தில் நிஜமாக்கிய கேப்டன் கோபிநாத் எழுதிய அவரின் சுயசரிதை Simply fly புனைவை சினிமாவுக்காக மட்டுமில்லாமல் தனக்ககேற்றபடியும் சூர்யா – சுதா மாற்றியிருப்பதே சூரரை போற்று…

surarai-potru2
surarai-potru2

பெரியாரிய , கம்யூனிஸ சிந்தனைகளோடு வரும் சூர்யா பேசியே கொல்லப்போகிறார் என பயந்தால் நல்ல வேளை அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் . அதுவும் அபபாவை பார்க்கப் போக டிக்கட் காசில்லாமல் ஏர்போர்ட்டில் கெஞ்சும் இடம் அருமை.  பாரக்க ஊர்வசியின் தங்கை போலிருந்தாலும் நடிப்பிலும் , பாத்திரப் படைப்பிலும் அபர்ணா அசத்துகிறார் . பல கோடி ரூபாய் தேவைப்படும் இடத்தில் பதினோராயிரம் கொடுத்து விட்டு போதாதா என அப்பாவியாய் கேட்கும் கருணாஸ் கவனிக்க வைக்கிறார் …

முகம் சாந்தமாய் இருந்தாலும் சகுனித்தனமான பார்வையில் வில்லத்தனத்தை காட்டத் தவறவில்லை பரேஷ் ராவத் . ஜி.வி.பிரகாஸ் குமாரின் இசையில் பின்ணணியும் , பாடல்களும் அருமை …

சாதாரண மனிதன் பல போராட்டங்களை தாண்டி ஜெயிக்கும் தெரிந்த கதை தானென்றாலும் அதை திரைக்கதையில் சொன்ன விதத்தால் ஜெயிக்கிறார் சுதா . உண்மைக்கதையை அப்படியே எடுக்க முடியாது தான் அதற்காக அதை சொன்ன விதத்தில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா ? சூர்யா அப்துல் கலாமை சந்திப்பது , ஊர் மக்கள் நிலத்தை அடமானம் வைத்து அவருக்கு பணம் அனுப்புவது , ஃப்ளைட்டை தரையிரங்க விடாமல் வில்லன் தடுப்பது என படத்தில் நிறைய பூ சுத்தல் …

surarai-potru
surarai-potru

நிஜத்தில் இப்புத்தகத்தை எழுதியவர் ஐயங்கார் . ஆனால் அவர் கதாபாத்திரத்தை பிற்படுத்தப்பட்ட பெரியாரியவாதியாக காட்டுவதில் சுதா கொங்கரா , ஜுமித் மாங்கா என சாதியை பெயருடன் தாங்கியவர்களுக்கு என்ன அவசியமோ இல்லை அழுத்தமோ தெரியவில்லை . அமேசான் ப்ரைமுக்கும் , தொடர்  தோல்விகளால் தவித்த சூர்யாவுக்கும் இந்த சூரரை போற்று – சூர்யாவை தேற்று …

ரேட்டிங்க்   : 3.25 
ஸ்கோர் கார்ட்: 43

சூரரைப் போற்று படத்தின் விமர்சன வீடியோ…

[embedded content]

விமர்சனம் : அனந்து(வாங்க ப்ளாக்கலாம்)

Source: Dhinasari News – Vellithirai News

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 × two =

லேட்டஸ்ட்

e0aeaee0af81e0ae95 e0ae9ae0aebfe0ae95e0aebfe0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af8be0aea9 e0aeaae0aebfe0ae95 e0aeaee0af81e0ae95 e0ae9ae0aebfe0ae95e0aebfe0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0af8be0aea9 e0aeaae0aebfe0ae95
செய்திகள்19 மணி நேரங்கள் ago

முக சிகிச்சைக்கு போன பிக்பாஸ் நடிகை! நேர்ந்த விபரீதம்!

Source: Dhinasari News – Vellithirai News

e0ae95e0aebee0aeb5e0aeb2e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0aeaee0aeb0e0aebfe0aeafe0aebee0aea4e0af88e0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0aeb5 e0ae95e0aebee0aeb5e0aeb2e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0aeaee0aeb0e0aebfe0aeafe0aebee0aea4e0af88e0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0aeb5
செய்திகள்2 நாட்கள் ago

காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

IMG 20210417 WA0007 நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி...

e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aeaee0aebee0aea4e0aebfe0aeb0e0aebf e0aeafe0aebee0aeb0e0af81e0aeaee0af8d e0ae9ae0af86e0aeaf e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aeaee0aebee0aea4e0aebfe0aeb0e0aebf e0aeafe0aebee0aeb0e0af81e0aeaee0af8d e0ae9ae0af86e0aeaf
செய்திகள்2 நாட்கள் ago

விவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு!

kumari muthu தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி...

e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0af81e0ae95e0aeb3e0af8d 82e0ae87e0aeb2e0af8d e0aeaee0aea4e0af81 e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0af81e0ae95e0aeb3e0af8d 82e0ae87e0aeb2e0af8d e0aeaee0aea4e0af81
செய்திகள்2 நாட்கள் ago

விவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்!

vivek in telephone operator n madurai1 டெலிபோன் ஆபரேட்டர் பணிக்காக 1982-83இல் மதுரையில் பயிற்சி பெற்ற போது, வகுப்பில் உள்ளவர்களுடன் நடிகர் விவேக் எடுத்துக் கொண்ட...

e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aeaee0aeb1e0af88e0aeb5e0af81 e0ae9fe0af8de0aeb5e0aebfe0ae9fe0af8de0ae9fe0aeb0e0aebfe0aeb2 e0aeb5e0aebfe0aeb5e0af87e0ae95e0af8d e0aeaee0aeb1e0af88e0aeb5e0af81 e0ae9fe0af8de0aeb5e0aebfe0ae9fe0af8de0ae9fe0aeb0e0aebfe0aeb2
செய்திகள்2 நாட்கள் ago

விவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, குஷ்பூ.. திரை பிரபலங்கள் இரங்கல்!

vivek நகைச்சுவை நடிப்பால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு இன்று...

Advertisement