கம்பனில் கிளைத்த கனிமரமும், கம்பரசத்தில் முளைத்த முட்செடியும்!

kannadasan vairamuthu - 1

கவிதை என்பதும் தமிழ் என்பதும் யாதெனில் சொல்லவந்த விஷயத்தை அழகு தமிழில் சுவைபட இலக்கிய நயத்துடன் சொல்வது..

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு”
என்கின்றார் கண்ணதாசன்.

இதே விஷயத்தை வைரமுத்து சொல்கின்றார்…
எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கம் ஆகிபோச்சி கணக்கு
பள்ளிகூடம் போகையிலே பள்ளபட்டி ஓடையிலே
கோக்குமாக்கு ஆகிபோச்சி என்னக்கு”

முதலிரவில் மெல்ல பதறும் ஆணின் மனநிலையினை சொல்கின்றார் கண்ணதாசன்…
“தேவி பூஜையிலே ஈஸ்வரனின்
பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இரண்டு
ஆடிடக் கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்
அவர் படித்த புத்தகத்தில்
சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித் தர
பள்ளி இல்லையே
கவிதையிலும் கலைகளிலும்
பழக்கமில்லையே
அவர் காதலிக்க நேற்று வரை
ஒருத்தி இல்லையே”
என இலைமறை காயாக சொல்கின்றார் கண்ணதாசன்…

அதையே வைரமுத்து உக்கிரமாக பாடுகின்றார்…
நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு
கிள்ளவா உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா
வரவா வந்து தொடவா
உன் ஆடைக்கு விடுதலை தரவா”

இலைமறை காயாக காமத்தை பாடினார் கண்ணதாசன் …
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதில் ஒரே சுகம்
ஒரே வீணை ஓரே நாதம்”

அதையே வைரமுத்து பாடினார்…
கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம்தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்”

ஏன் கண்ணதாசன் அப்படியும் வைரமுத்து இப்படியும் எழுதினார்கள்?

கம்பனில் கரைந்தவன் கண்ணதாசன், அண்ணாவின் “கம்பரசம்” எனும் ஆபாச நூலில் கரைந்தவர் வைரமுத்து

ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களிலும் நாயன்மார்களிலும் கரைந்தவர் கண்ணதாசன், ஆண்டாள் கதையினையும் ஆபாசமாக கண்ட திராவிடவாதி வைரமுத்த

கருணாநிதியின் தமிழை, கவிதையினை கண்டு தலைதெறிக்க ஓடியவர் கண்ணதாசன், ஆனால் கருணாநிதி எழுதியதை எல்லாம் ஒரு பாடமாக படித்துக் கொண்டாடியர் வைரமுத்து!

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply