கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாந்தினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்டிக்கடை’ திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்…

உலக மயமாக்கலால் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி அசுர வளர்ச்சி பெற்று கிராமங்கள் வரை ஊடுறுவுகின்றன. அரசு எப்படி அவர்களுக்கு துணை போகிறது என்பதை பெட்டிக்கடை படம் விவரிக்கிறது.

ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆசிரியையாக வரும் சாந்தினி, அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் இருப்பதையும், ஆன்லன் மூலமாகவே அந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருகிறார்கள் என்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதுபற்றி அந்த ஊர் மக்களிடம் விசாரிக்கும் போது, ஒரு கார்ப்பரேட் கம்பெனி அந்த கிராமத்தில் கடைகள் வைக்க விடாமல் தடுத்து வந்ததுபற்றியும், அந்த கம்பெனிக்கு எதிராக சமுத்திரக்கனி எவ்வாறு போராடினார் என்பது பற்றியும் கூறுகிறார்கள்.

கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

இதைக்கேட்ட நந்தினி சமுத்திரக்கனி போல போராட்டத்தின் மூலம் அந்த ஊரில் பெட்டிக்கடையை திறக்க முடிவு செய்கிறார். அதேபோல், கர்ப்பரேட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்கிறார். அந்த போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை மீதிப்படம் விவரிக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி சிறு வணிகங்களை சீரழிக்கிறது. அதற்கு அரசே எப்படி துணை நிற்கிறது என சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ள இயக்குனர் இசக்கி கார்வண்ணனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். கிராமங்களில் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழையும் அதிர்ச்சியான அரசியலை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

தவறை தட்டிக் கேட்கும் வேடத்தில் சமுத்திரக்கனி அவரின் கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளார். மொசக்குட்டி வீரா, மொட்டை ராஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், சாந்தினி ஆகியோர் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். கதையின் அடிநாதத்தை புரிந்து மரியா மனோகரின் இசையமைத்துள்ளார். கதை மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு சேர்ந்து பயணிக்கிறது அருள், சீனிவாஸ் ஆகியோரின் கேமரா. எடிட்டர் சுரேஷ் அர்ஸ் இப்படத்திற்கு பெரிய பலம். அவரது எடிட்டிங்கில் படம் விறுவிறுவென செல்கிறது.

படத்தை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன். மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். இது போன்ற திரைப்படங்கள் நிறைய வரவேண்டும். மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என நம்மை யோசிக்க வைத்து விடுகிறார்.

பெட்டிக்கடை – பார்க்க வேண்டிய திரைப்படம்…

ரேட்டிங் – 4/5

Source: விமர்சனம்

The post கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம் appeared first on Vellithirai News.


Comments

Leave a Reply

%d bloggers like this: