~ டி.எஸ்.வேங்கடேசன் ~
செந்தூர் பிலிம இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடித்து ஓடிக் கொண்டிருக்கும் கோடியில் ஒருவன் தாயின் சபதத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் மகன், எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டது.
கம்பம் அருகே மலைக்கிராமத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர் உள்ளிட்ட பல வீடுகளில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு சமூக ஆர்வம் உள்ளது. அரசியல் பிரமுகரின் ஆணைப்படி அவர் பஞ்சாயத்து தலைவராகிறார்.
மக்களுக்கு நலனுக்காக ஊழல் செய்யாமல் செயல்பட்டு பாராட்டை பெறுகிறார். பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அரசியல் பிரமுகர் கர்ப்பிணியான அந்த பெண் மற்றும்அவரது கணவரை ஆள்வைத்து கொலை செய்ய முயற்சிகிறார். தீவைக்கப்பட்ட அப்பெண் ஆற்றில் குதித்து உயிர் தப்பிக்கிறார். மகன் பிறக்கிறான்.
பல வீரகதைகளை கூறி அதிகாரம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியாகி இவர்களை தண்டிக்க வேண்டும் என கூறி வளர்க்கிறார். அப்போதுதான் வீட்டை விட்டு வெளியே வருவேன் என்ர சபத்தையும் மகனிடம் கூறுகிறார்.
நன்றாக படித்து ஆண்டனி சென்னைக்கு ஐ ஏஎஸ் தேர்வு பயிற்சிக்காக வந்து குடிசை மாற்றுவாரிய வீட்டில் குடியேறுகிறார். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து, ரவுடித்தனம் செய்துவரும் இளைஞர்களுக்கு இலவச டியூஜன் எடுத்து படிக்க வைக்கிறார். பகுதி மக்களின் அன்பை பெறுகிறார்.
அரசியல்வாதிகள் எவ்வித திட்டத்தையும் செலவு செய்யாமல் லட்சக்கணக்கில் கொள்ளை அடிப்பதை கண்டு வெகுண்டு எழுகிறார். ஜஏஎஸ் தேர்வுக்கு செல்லும் போது ரவுடிகளால் தாக்கப்படுகிறார். சான்றிதழ்களை அவர்கள் கிழித்துப் போட்டு விடுகின்றனர். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் மிரட்டலுக்கு உள்ளாகிறார். அப்பகுதியை சொர்க்க புரியாக மாற்றுகிறார்.
கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்யவைக்கின்றனர். சட்டப் பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். பெரும்பான்மைக்கு அவரது உதவி தேவைப்படுவதால் முதல்வர் பதவியை கேட்கிறார். முதல்வராகிறார். கிராமத்துக்கு வந்து தாயை அழைத்து செல்கிறார்.
உள்ளூர் அரசியல்வாதி உள்பட பலர் கைதாகின்றனர். ஐஏஎஸ் கனவுடன் தாயின் கனவை நிறைவேற்ற வந்த விஜய் ஆண்டனி அரசியல்வாதி ஆகிறார். இதுதான் கதை சுருக்கம். சண்டை காட்சிகள், காதல், நகைச்சுவை காட்சிகள் எனபடம் செல்கிறது. ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
ஆண்டனியின் காதலியாக ஆத்மிகா, அம்மாவாக திவ்ய பிரபா, கேஜிஎப் படத்தில் நடித்த ராமசந்திர ராஜூ வில்லானாக ( ஆளும் கட்சியின் மாவட்ட தலைவராக) நடித்துள்ளனர். இரண்டாவது வில்லனாக சூப்பர் சுப்பராயன் கவுன்சிலராக வந்து பேச்சிலேயே அதிரடி காட்டுகிறார். அவரது அடியாளாக சூரஜ் போப்ஸ், பாகுபலி பிரபாகர், பூராம் என ஏராளமான வில்லன்கள். நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசை அமைத்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உதயகுமாரின் கேமார அசத்துகிறது. ஒரு தாய் நினைத்தால் அவரது பிள்ளைகளை எப்படி சக்திமிக்கவனவாக, பொறுப்புள்ளவனாக வளர்க்க முடியும் என்பதை கதை உணர்த்துகிறது.