எதற்கும் துணிந்தவன்… அதான்..!


etharkkum thuninthavan review - Dhinasari Tamil

ஓடிடி யில் வரிசையாக ஹிட் கொடுத்த சூர்யாவுக்கு மூன்று வருடங்கள் கழித்து தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் தனது படங்களை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவிற்கு இந்த படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் …

படத்தின் கதை பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டது . அதில் பாண்டிராஜ் தனக்கே உரிய கிராமத்து பிண்ணனி யில் குடும்ப செண்டிமென்டை சேர்த்துக் கொடுத்திருக்கிறார் . வக்கீல் கண்ணபிரானாக சூர்யா இந்த ஆர்டினரி கதைக்கு எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக நடித்திருக்கிறார் .‌‌‌ஹீரோயின் பிரியங்கா ஆள் ஸார்டாக இருந்தாலும் அவர் எக்ஸ்ப்ரெஸன்ஸ் க்யூட்டாக இருக்கிறது . ஆஸ் யூசுவல் அம்மாவாக சரண்யா . கிராமத்து பிண்ணனி க்கு பொருந்தா வில்லனாக வினய் …

காமெடியன் சூரியை விட இளவரசு – தேவதர்ஷினி ஜோடி காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கிறது .‌‌ பாலியல் மிரட்டல்களுக்கு எதிராக பெண்களை தைரியமாக இருக்க சொல்வது , காவலன் ஆப்பின் பயன்பாட்டை சொல்வது எல்லாம் படத்தின் பாஸிடிவ் . ஆரம்பத்திலும் , இடைவேளையிலும் அழகான காட்சியமைப்பு , ஒளிப்பதிவு ப்ளஸ் …

வில்லன் வினய் ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ வை வெளியிடுவேன் என மிரட்ட அடுத்த காட்சியில் ஹீரோ ஏதாவது செய்வார் என பார்த்தால் அவர் கூலாக காஃபி சாப்பிட்டு விட்டு டூயட் பாடுவது சுத்த அபத்தல் . ஆக்சன் திரில்லாகவும் இல்லாமல் ஃபேமிலி என்டர்டெய்னராக வும் இல்லாமல் தொங்குகிறது படம் .‌‌‌ இருப்பினும் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளை தனக்கேயுரிய ஸ்டைலில் அழகாக இயக்குனர் எடுத்திருப்பதால் எதற்கும் துணிந்தவன் – குடும்பஸ்தன் …

ஸ்கோரர் கார்ட் ‌: 40

ரேட்டிங்க் : 2.5 *

  • விமர்சனம் : அனந்து

ஓடிடி யில் வரிசையாக ஹிட்டடித்த சூர்யாவிற்கு உண்மையான பலப்பரீட்சை தியேட்டரில் ரிலீஸான இந்த படம் . விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் படத்தை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்படி ? Vanga Blogalam ல் வாங்க பார்க்கலாம் … #EtharkkumThunindhavan #etharkumthuninthavan #Suriya

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply