உள்ளடக்கம்
துணிவு
சென்னையில் உள்ள ‘யுவர்ஸ் பேங்க்’ என்ற பேங்கில் இருந்து 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க உதவி கமிஷனரும் சிலரும் திட்டம் தீட்டுகிறார்கள்.
அவர்கள் கொள்ளையடிக்கச் சென்ற அதே பேங்க்கில் சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜித் சென்று அந்தக் கொள்ளையர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.
அவரைப் பிடிக்க கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்த பேங்க்கில் கொள்ளையடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் அஜித். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு அதிரடி ஆக்ஷன் கதையில் தங்களது வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் எப்படியெப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு.
மியுச்சுவல் பண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு என பல விஷயங்களால் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என படம் பார்ப்பவர்களுக்கும் சேர்த்து கொஞ்சம் பாடம் நடத்துகிறார்கள்.
படத்தில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் வெடித்தது, எத்தனை பாம்கள் வெடித்தது என கணக்கெடுக்க முடியாது. வழக்கம் போல யார் என்ன சுட்டாலும் ஹீரோவுக்கு லேசாக மட்டுமே காயம் ஏற்படும் என்பது உள்ளிட்ட லாஜிக் மீறல்கள் படத்தில் நிறையவே உண்டு.
வங்கிகளில் தரும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட வேண்டாம், பணத்திற்காகப் போராசைப்பட வேண்டாம் என கடைசியாக தேவையான ஒரு மெசேஜையும் சொல்லி முடித்திருக்கிறார்கள். ‘..
வாரிசு
மிகப் பெரும் பிசினஸ்மேன் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். ஸ்ரீகாந்த், ஷாம், விஜய். தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வாழ நினைப்பவர் விஜய்.
அதனால் அப்பாவுடன் சண்டை வர வீட்டை விட்டு வெளியேறி அவருக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அப்பா, அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக அம்மா வற்புறுத்தலால் வீட்டிற்கு வருகிறார்.
அப்பா சரத்குமார் கேன்சரால் அண்ணன்கள் ஸ்ரீகாந்த், ஷாம் வீட்டைவிட்டு வெளியே போகிறார்கள். ஒரு பக்கம் குடும்பம் கலைய, மறுபக்கம் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ், சரத்குமார் பிசினஸை அழிக்க நினைக்கிறார். அவற்றை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆக மொத்தத்தில் வாரிசு ஒரு நல்ல மெகா சீரியல்.
- விமர்சனம்: புகழ் மச்சேந்திரன்