ரஜினி 168 திரைப்படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகை மீனா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், நடிகை மீனா இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது.
தற்போது, இப்படத்தில் மீனா நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பது குறித்து மீனா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் முதன் முதலாகவும், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலாக நடிப்பதாகவும், ரஜினியுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிப்பதாகவும், இப்படத்தில் தான் வரும் இடம் எல்லாம் கலகலப்பாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
— Sun Pictures (@sunpictures) December 10, 2019
The post தலைவர் 168ல் நான்.. என் கேரக்டர் அப்படி தெறிக்கும்.. மீனா பேசும் வீடியோ appeared first on Dhinasari Tamil.
Source: டிரைலர்
The post தலைவர் 168ல் நான்.. என் கேரக்டர் அப்படி தெறிக்கும்.. மீனா பேசும் வீடியோ appeared first on Vellithirai News.