செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கம் – கதறி அழும் பிரபல நடிகை (வீடியோ)

 

தமிழில் சின்னத்திரையில் நடித்து வருபவர் ஜனனி. செம்பருத்தி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என 2 சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து தனது யுடியூப் சேனலில் ரசிகர்களிம் உரையாடி வருகிறர். 

நேற்று அதுபோலவே ரசிகர்களிடம் முக அழகை பராமரிப்பது பற்றி பேசி வந்தார். அதன்பின் திடீரென அழ துவங்கினார். பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும், செம்பருத்தி சீரியலில் இருந்து தன்னை தூக்கிவிட்டதாகவும் சொல்லி கதறி அழுதார். 

அதேநேரம் இதில் அவர்கள் தவறு ஒன்றும் இல்லை. என்னால் ஒரே நேரத்தில் 2 சீரியல்களில் நடிக்க முடியவில்லை. மேலும், சில பிரச்சனைகள் இருந்தது. அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போவது வருத்தமாக இருக்கிறது என கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, நீங்கள் செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.உங்களை மிஸ் செய்வேன் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


Comments

Leave a Reply

%d bloggers like this: