அச்சுறுத்தும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளும் சில இடங்களில் அவலமும் அரங்கேறி வருகிறது.
கொரோனா முடக்கம் காரணமாக வேலை இல்லா சோகத்தால், தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகையே வெகுவாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. க்கொரோனாவால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலும் முடங்கியது. இதன்காரணமாக சினிமா தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். சிலர் அச்சுறுத்தும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளும் சில இடங்களில் அவலமும் அரங்கேறி வருகிறது.
சென்னையை அடுத்த கொடுங்கையூர் முத்தழ்மிழ் நகரைச் சேர்ந்தவர்கள் சின்னத்திரை நடிகர்களான ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி. இருவரும் தொலைகாட்சித் தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களது வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததுடன், வீட்டிலிருந்து துர்வாடை வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவி உடைத்து திறந்த போது இருவரது சடலங்களும் அழுகத் துவங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இவ்வாறு சின்னத்திரை நடிகர்கள் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.