இலக்கியா, ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ என கவர்ச்சிக்கும், வம்புக்கும் களைகட்டும் பிக்பாஸ் சீசன்!

வெளியில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 3 சீசன்களை முடித்து விட்ட சேனல், தற்போது 4வது சீசனுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் நட்சதிரங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

வெளியில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானவர்கள் அல்லது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பிரச்சினையை உருவாக்குகிறவர்கள் என்று பட்டியலிட்டு நட்சத்திரங்களை தேடி வருகிறது சேனல். இதற்கிடையில் சமீபகாலமாக டிக்டாக் மூலம் கவர்ச்சியான படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலக்கியாவை இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர பங்ககேற்பாளராக களம் இறக்க சேனல் முடிவு செய்திருக்கிறது.

அதோடு சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னையில் சிக்கிய சீரியல் பிரபலங்களான ஈஸ்வர், ஜெயஸ்ரீ, மகாலட்சுமி ஆகியோரையும் பங்கேற்க வைக்க பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.கொரோனா காலம் முடிந்த உடனேயே நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஊரடங்கிற்கு பிறகு சீரியல்கள் பிக்அப் ஆவதற்கு சில காலம் ஆகும் என்பதால் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை களம் இறக்குகிறார்கள். 4வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதும் கமல்தான். வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் பிக்பாஸ் வீடு பெரிதாகும், அல்லது பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிகிறது.

%d bloggers like this: