பிக்பாஸ்’ ரகசிய அறையிலிருந்து கவினுக்கு கடிதம் எழுதிய சேரன்…

பிக்பாஸ்’ ரகசிய அறையிலிருந்து கவினுக்கு கடிதம் எழுதிய சேரன்…

மொத்தமாக நூறு நாட்கள் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 75 நாட்களை கடந்து விட்டனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். பின்பு அவர் சீக்கிரம் ரூமிற்கு பிக்பாஸால் அனுப்பப்பட்டார்.

சீக்ரெட் ரூமில் இருந்தவாறு மற்ற போட்டியாளர்களின் செயல்பாட்டை கவனித்துக் கொண்டிருக்கிறார் சேரன். கடந்த சில வாரங்களாகவே லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து
புரிந்துகொண்டு ஒருவர் மேல் ஒருவர் பாசமாகவும் நட்பாகவும் பழகி வருகின்றனர்.

கிட்டத்தட்ட காதலிக்கின்றனர். லாஸ்லியாவின் தந்தை கதாபாத்திரத்தில் தன்னைப் பிரதிபலித்துக் கொள்ளும் சேரனுக்கு அவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போதே லாஸ்லியா கவினுடன் நெருங்கி பேசுவது பிடிக்கவில்லை.

சேரன் கவின் மேல் காட்டிய வெறுப்பே அவர் எவிக்ட் ஆவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீக்ரெட் ரூமில் இருந்துக்கொண்டு கவின் லாஸ்லியாவின் நெருக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கும் சேரன் இப்போது கவினுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் சேரனின் கடிதத்தை போட்டியாளர்கள் மத்தியில் படித்துக் காட்டும் தர்ஷன், “கவின் அவர்களுக்கு, வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று.

அப்படியிருந்தும் லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா. செலிபிரேட் பண்ணலாம் என்று அவரை நீங்கள் யோசிப்பது மிகவும் தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா?” என்று சேரன் கடிதத்தில் கூறியுள்ளார்.

Source: டிவி-தொடர்கள்

The post பிக்பாஸ்’ ரகசிய அறையிலிருந்து கவினுக்கு கடிதம் எழுதிய சேரன்… appeared first on Vellithirai News.


Comments

Leave a Reply

%d bloggers like this: