[prisna-google-website-translator]

ஒட்டு தாடியில் சிக்கிய கவின்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா?

ஒட்டு தாடியில் சிக்கிய கவின்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா?

Actor Kavin quit from biggboss home – பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகர் கவின் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்தவர் கவின். இவரின் தாய் ராஜலட்சுமி மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களுக்கு சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்ததாக 2007ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் நேற்று 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஒட்டு தாடியில் சிக்கிய கவின்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா?

ஆனால், சாஹோ திரைப்படம் பற்றிய விமர்சனம் ஒன்றை ஒரு யுடியூப் சேனல் தியேட்டரில் இன்று காலை எடுத்த போது படம் குறித்து கருத்து தெரிவித்த ஒருவர் அச்சு அசல் 100 சதவீதம் அப்படியே கவின் போலவே இருந்தார். எனவே, அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலரும் கவின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதுதான் ஆதாரம் என பதிவிட்டு வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் கவின் வெளியேறிவிட்டாரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

Source: டிவி-தொடர்கள்

The post ஒட்டு தாடியில் சிக்கிய கவின்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா? appeared first on Vellithirai News.

Leave a Reply