[prisna-google-website-translator]

வீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ

nisha

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 4வது சீசனிலும் கலந்து கொண்டார். ஆனால், தனது திறமையாக காட்டி விளையாடாமல், தனக்கு பிடித்த ரியோ, அர்ச்சனா உள்ளிட்டோர் வெற்றி பெற வேண்டும் என அவர் விளையாடியதாலும், ரோபோ டாஸ்க்கில் அர்ச்சனாவிடம் அவர் நடந்து கொண்ட முறையாலும் நேற்று நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், 70 நாட்கள் கழித்து நேற்று அவர் வீட்டிற்கு சென்ற போது அவரது குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அழித்தனர். அவரின் தாய் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். அதன்பின் தனது மகனை நிஷா கட்டி அணைத்துக்கொண்டார். மேலும், நிஷாவை கேக் வெட்ட வைத்தும் அவர்கள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Leave a Reply