Author: Sri Sriram

  • இந்த கடினமான நேரத்தில்.. சத்தியம் செய்யும் சமந்தா!

    samantha1 நடிகை சமந்தா – நடிகர் நாகை சைத்தன்யா திருமண முறிவு செய்திதான் தற்போது சினிமா உலகில் பேசுபொருளாக உள்ளது. அவர்களுக்குள் என்ன பிரச்சனை? இதன் பின்னணி என்ன? என பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாக சைத்தன்யாவுக்கு வேறு நடிகையுடன் காதல், சமந்தாவுக்கு ஒரு ஆடை வடிவமைப்பாளருடன் காதல், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதது, இதன் பின்னணியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் என பல செய்திகள் வெளியானது. இந்நிலையில், நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவில் ‘என் சொந்த…

  • ருத்ரதாண்டவம்: மூன்றே நாளில் ரூ. 7.25 கோடி வசூல்!

    rudra dhandavam கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் ‘ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து, ஒய் ஜீ மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ், ஜெயம் எஸ்.கே கோபி, தீபா, காக்கா முட்டை விக்னேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜூபின்…

  • வலிமை: பல சுவாரஸ்ய தகவல்களும், லேட்டஸ்ட் புகைப்படங்களும்..!

    ajith kumar தமிழ் திரைப்பட உலகில் அஜித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் துவங்கியது முதலே இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவிக்கவில்லை. அப்டேட் கேட்டு கேட்டு ஒருகட்டத்தில் அவர்கள் ஓய்ந்தே…

  • மோகன்லால், பிருத்விராஜ் இசை கொண்டாட்டம்… வைரல் வீடியோ!

    Mohan Lal மோகன்லாலுக்கு நடிப்பு எந்த அளவிற்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பாடிய வீடியோக்கள் பலவற்றை இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி உள்ளனர். அப்படி மற்றொரு வீடியோவையும் மோகன்லால் ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர். மோகன்லால் சமீபத்தில் இசை கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து சூப்பர் தமிழ் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தாளம் போட்டுள்ளார். மோகன்லால் Cajon வாசித்த இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இந்த…

  • அவதார்: அடுத்தடுத்த பாகங்கள்.. வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    avathar பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையே படைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார். ஒரு பாகம் இரண்டு பாகம் அல்ல தொடர்ந்து ஐந்து பாகங்கள் வரை…

  • நாட்டு நடப்பே ருத்ரதாண்டவம்.. விழிப்புணர்வு தரும் இயக்குநர்!

    rudra dhandavam ருத்ர தாண்டவம் படக் காட்சியைப் போல நிஜத்திலும் நடைபெற்றுள்ளதாக, அந்தப் பட இயக்குநர் மக்களை எச்சரித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் சத்யசீலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், வருகிற 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது வீட்டு முகவரியை பயன்படுத்தி, ஊருக்கு சம்பந்தமே இல்லாத, சோளிங்கரில் இனிப்பு கடை நடத்தும் சென்னையை சேர்ந்த பிரேம்நாத் என்பவர்…

  • உயிருக்குப் போராடும் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ஜூனியர் என்டிஆர்!

    ndr சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரது கடைசி ஆசையை பிரபலதெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நிறைவேற்றி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வைரல் ஆகி வருகிறது. நாம் எவ்வளவோ ஆராதிக்கும் நமது திரைப்பட கதாநாயகர்களில் சிலர் நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்கள் பின்பற்றக்கூடிய வகையில் வாழ்ந்து காட்டி இருப்பார்கள். மேலும் சிலர், தங்களது ரசிகர்களை மதித்து நடந்து கொள்வார்கள். ரசிகர்களால்தான்…

  • ஆடையின்றி நடிப்பு.. பிசாசு 2 புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!

    மிஸ்கின் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை எடுத்து உள்ளார். இப்படம் காட்சிக்கு காட்சி ரசிகர்களை மிரள வைக்க போகும் எனவும், ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுவீர்கள் எனவும் மிஸ்கின் கூறியிருந்தார். pisasu மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிஸ்கின் வெளிப்படையாகவே பதிலளித்தார். தற்பொழுது ஆண்ட்ரியா நடித்த நிர்வாண போஸ்டரை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது பிசாசு 2 படத்தில் 15 நிமிடம் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்க வேண்டியிருந்தது.…

  • விவாகரத்த்தை சங்கீத் வைத்து கொண்டாடுங்கள்: ராம் கோபால் வர்மா சர்ச்சை ட்விட்!

    திருமணத்தை விட விவாகரத்தை தான் அதிகம் கொண்டாட வேண்டும் என்று பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா ” திருமணத்தை விட விவாகரத்து தான் கொண்டாடப்பட வேண்டும், ஏனென்றால் திருமணத்தில், நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, அதேசமயம் விவாகரத்தில் நீங்கள் பெற்றதில் இருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள். திருமணங்கள் நரகத்திலும், விவாகரத்துகள் சொர்க்கத்திலும் நிச்சயிக்கப்படுகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் திருமணங்களில் சங்கீத்…

  • அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற செல்ஃபி பர்ஷானா!

    parshana நடிகர் அஜித் வீட்டு முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா. கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மருத்துவமனைக்கு பிரபல நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை சந்திக்க நடிகர் அஜித் வந்துள்ளார். அப்போது மருத்துவரின் உதவியாளராக பணியாற்றிய பர்ஷானா ஆர்வ மிகுதியால் நடிகர் அஜித்தை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த…