[prisna-google-website-translator]

‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்! குமுறும் நடிகை!

கண்ட நாள் முதல் படத்தில் மணப்பெண்ணாக ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பாடகியான அவர் இதன் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன.

அவர்தான் வேண்டும்.. அதிரடியாக கண்டிசன் போட்ட விஜய்.. தளபதி 65ல் நடக்க போகும் மாபெரும் டிவிஸ்ட்!

கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாலன், விஸ்வரூபம் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு வட சென்னை என்ற படம் அவரது நடிப்பில் வெளியானது.

அதன்பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்தார் ஆண்ட்ரியா. கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் பங்கேற்ற அவர், திருமணமான ஆண் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை ஆண்ட்ரியா தற்போது, கா, வட்டம், மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அந்தப் படத்தில் அப்படி நெருக்கமாக நடித்ததால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கவே தனக்கு வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார்.

நல்ல கதை, நல்ல வேடம் உள்ள படங்களில் நடிக்க விருப்பமுடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். நல்ல கதைகள் என்றால் சம்பளத்தை குறைக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா தற்போது நடிகர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அது தொடர்பான போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply