தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனான வலம் வரும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் வலிமை.
அஜித்தின் 60வது படமான இதில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், இது உயர் ரகமான ஆக்சன் திருவிழா, வலிமை மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சாந்தனு, தியேட்டர் சும்மா தெறிக்க போகுது, நம்பமுடியாத ஸ்டண்ட் காட்சிகள். வலிமை ஒரு சிறந்த ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும் என கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து நடிகர் கவின், வலிமையான ட்ரெய்லர் எனவும், சாக்ஷி அகர்வால், இதுவரை இவ்வளவு அதிகமான ரேஸ் மற்றும் உற்சாகம் மிகுந்த மூன்று நிமிட டிரைலரை கண்டதில்லை. வேற லெவல் சூப்பர் ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தல என தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.