[prisna-google-website-translator]

காலமானார் கவிஞர் காமகோடியான்!

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் காமகோடியான் புதன்கிழமை நேற்று இரவு 8.15க்கு காலமானார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றவர் கவிஞர் காமகோடியான்.

காமகோடியன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து சினிமாப் பாடல்கள் இயற்றி வருகிறார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் இவர் பாடல்களை இயற்றியுள்ளார்.

1987இல் வந்த நினைக்கத் தெரிந்த மனமே படத்தில் வந்த இவரது கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்… , எங்கெங்கு நீ சென்ற போதும்… பாடல்கள் மெல்லிய பாடல்களாக ரசிகர்களை கவர்ந்தன.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் மிகப் பிரபலமானது.

2015ல், திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்து பாடல்களையும் ௭ழுதும் வாய்ப்பை பெற்றார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply