பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடகரான சித்ஸ்ரீராம் உலகப் புகழ்பெற்ற பெர்க்லி இசைப்பள்ளியின் மாணவர் ஆவார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘கடல்’ படத்தில் ‘அடியே அடியே’ பாடலை பாடி திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடிய சித் ஸ்ரீராம் யூத் ஐகானாக மாறினார். குறிப்பாக இவர் பாடிய , ‘என்னோடு நீ இருந்தால்’, ‘தள்ளிப்போகாதே’, ‘ சச்சின் சச்சின்’, ‘ஹை ஆன் லவ்’, ஓ.எம். ஜி பொண்ணு, “கண்ணான கண்ணே” தெலுங்கில் ‘இங்கி இங்கி கவலே’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே மணிரத்னம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கத்தில் உருவான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த நிலையில் சித் ஸ்ரீராம் ஒரு புதியப்படத்தில் கதாநாயகனாக அறிமுக ஆக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
அந்தத் தகவலின் படி சித் ஸ்ரீராம் மணி ரத்னத்தின் இயக்கத்திலோ அல்லது தயாரிப்பிலோ கதாநாயகனாக அறிமுகம் ஆகலாம் எனத் தெரிய வந்துள்ளது.
https://www.instagram.com/tv/CYIwNpXL-Ak/?utm_source=ig_embed&utm_campaign=loading