[prisna-google-website-translator]

வைரலாகும் அஜித் புகைப்படம்! அடுத்த படத்துக்கான ஏற்பாடோ..?

அஜித் நடிப்பில் உருவாகியிருந்த வலிமை படத்தை தான் அவரது ரசிகர்கள் பொங்கல் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக போனி கபூர் இப்படத்தை தற்போது வெளியிடவில்லை என அறிவிக்கிறார். இதனால் அஜீத் ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் இருந்தனர்.

ஆனால் வலிமை படத்தை ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபத்தில் அஜித் மீண்டும் ஹச் வினோத் உடன் கூட்டணி அமைத்து AK 61 எனும் படத்தை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று AK 61 படத்திற்கான பூஜை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தான் பூஜை போடப்படும் என சினிமா வட்டாரத்தில் இருந்து பலரும் கூறி வருகின்றனர்.

அஜித் சமீபகாலமாக தனது உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது மீண்டும் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் அஜித் குமார் கருப்பு நிற டீசர்ட்டில் உடல் வலிமையுடன் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் AK 61 படத்தில் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply