– Advertisement –
– Advertisement –
நடிகர் விஜய் தேவர கொண்டாவின் சங்கராந்தி தின புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
நடிகர் விஜய் தேவர கொண்டா தற்போது இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்ட முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்கள் தான் என்றாகிவிட்டது.
தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் இந்திய அளவில் பல மொழிகள் வெளியாக இருக்கிறது.
அந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்சிங் வீரராக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் மைக் டைசனும் நடித்துள்ளதால் படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது விஜய் தேவரகொண்டா சங்கராந்தி தினத்தை முன்னிட்டு குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுள்ளார். சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் அப்பா, அம்மாவுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
– Advertisement –