
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த சிலர், கொரோனா அறிகுறியால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
கோயம்பேடை அடுத்து, கோடம்பாக்கத்தையும் வாட்டி எடுத்து வருகிறது கொரோனா. கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா என சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
முன்னதாக, வெளிநாடு சென்று வந்த நடிகர்கள், திரையுலகினர் இது போல், தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறினர் நடிகர் கமல்ஹாசன், நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சிலரும், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோரும் இது போல், பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
நடிகை நயன்தாரா அண்மையில், மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடம் கட்டி நடித்து முடித்தார். அவர் தற்போது எழும்பூரில் தனிமையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் காலமான பிரபல பாடகர் ஏ.எல்.ராகவன், முதலில் மாரடைப்பால் காலமானதாகக் கூறப் பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் உயிரிழந்தார் என்று தகவல் பரவியது. ஏஎல் ராகவனின் மனைவி எம்.என்.ராஜத்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப் படுகிறது.
Related
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News