அண்ணாத்தே பட ஷூட்டிங் மீண்டும் துவக்கம் – பரபர அப்டேட்

annathe

annathe

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வந்த அண்ணாத்தே திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. 7 மாதங்களுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.

சமீபத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி ‘அண்ணாத்தே’ படத்தை முடித்துக்கொடுப்பது என் கடமை என கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்காக ரஜினி வருகிற 14ம் தேதி ஹைதராபாத் செல்லவிருக்கிறார். எனவே, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply