சித்ராவின் தற்கொலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஹீரோ போட்ட உருக்கமான பதிவு…

kumaran

kumaran

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார்.

சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர தங்கியியிருந்தார். அந்த ஹோட்டல் அறையில்தான் இன்று அதிகாலை அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவின் கணவராக நடித்த நடிகர் குமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நீ தைரியமான பெண் என அறியப்பட்டாய். பல பெண்களுக்கு நீ முன்னுதாரணமாக இருந்தாய். நீ திரும்ப சண்டை போட்டிருக்க வேண்டும். இது சரியான பதில் அல்ல, எப்போதும் இருக்காது’என பதிவிட்டுள்ளார்.

post

Leave a Reply