கூகுளில் சாதனை செய்த சூரரைப்போற்று – தென் இந்தியாவில் முதலிடம்…

suriya

suriya

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சூர்யாவின் நடிப்பை திரையுலகினரும் பாராட்டும் வகையில் இருந்தது. அமேசான் பிரைமில் இதுவரை அதிகம் பேர் பார்த்த திரைப்படமாக இப்படம் அமைந்து சாதனை படைத்தது.

மேலும், 2020ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட ஹேஷ்டேகுகளில் #SooraraiPottru இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது.

இந்நிலையில், மற்றொரு சாதனையையும் சூரரைப்போற்று நிகழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டில் கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் சூரரைப்போற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை #Dilbechara என்கிற பாலிவுட் படம் பிடித்துள்ளது.

அதேநேரம், கூகுள் தளத்தில் தென்னிந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சூரரைப்போற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது

Leave a Reply