மாற்றம் என்றும் மாறாது.. 45 வருட நண்பனே!.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா…

bharathi raja

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது டிவிட்டரில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

மாற்றம் ஒன்றே மாறாதது,
நாம் அனைவரும் அறிந்தது..

விதிவிலக்காக
உச்ச நட்சத்திரம் ஒன்று
மட்டும்
உண்டு என்று
நான் அறிந்தது.
முதல் சந்திப்பில்
பார்த்த அதே பார்வை,
பாசம்,வேகம்,விவேகம்.
நாற்பத்தைந்து வருட
நண்பனே,
பல்லாண்டு நீடுழி வாழ
வாழ்த்துகிறேன்