தளபதி 65…. வாழ்த்து சொல்லாத முருகதாஸ்..கடுப்பு இருக்கத்தான செய்யும்!..

vijay

மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார்.

நெல்சனுக்கு முன்பு விஜயை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் வெளியேறி விட நெல்சன் கூறிய கதையில் விஜய் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் திரையுலகில் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் போடவில்லை.

‘அவருக்கு என்ன கடுப்போ’ என சினிமா வட்டாரம் சிரிக்கிறது.