பிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா?…

sathyaraj

sathyaraj

நடிகர் சத்தியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பெரியார் கொள்கை மீது பற்று கொண்டவர். பகுத்தறிவுவாதியும் கூட. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால், அவர் தனது மகளுக்காகவே பிரச்சாரம் செய்யவுள்ளது தெரியவந்துள்ளது. அவரது மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர். கொரோனா நேரத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்கிற இயக்கத்தை துவங்கினார். மருத்துவ துறைகளில் உள்ள முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வு வேண்டாம் என்றும் பிரதமர் மோடிக்கு திவ்யா கடிதம் எழுதியவர்.

மேலும், கொரோனா காலத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயத்துறை அமைச்சரிடம் திவ்யா கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஏதேனும் கட்சியில் இணைந்து அவர் போட்டியிடுகிறாரா இல்லை சுயேட்சையாக போட்டியிடுகிறாரா என்பது தெரியவில்லை.

Leave a Reply