தனுஷின் துள்ளல் நடனத்தில்  ‘புஜ்ஜி’ – ஜகமே தந்திரம் பாடல் வீடியோ

பீசா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. மே மாதமே வெளியாகவேண்டிய இத்திரைப்படம் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் வெளியாகவில்லை. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி பாடல் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். தனுஷ் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

seventeen − two =