என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. லஷ்மி இராமகிருஷ்ணனை தொடர்ந்து அசிங்கப்படுத்தியவர் இவர்தான்: கண்டுபிடித்த கணவர்!

lakshmi ramakrishnan
lakshmi ramakrishnan

நடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது பல விஷயங்கள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பார். இந்த நிலையில் அவர் என்ன பதிவிட்டாலும் அதனை விளாசி சிலர் மிக மோசமான கமெண்டுகளை பதிவிடுவர்.

இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் மோசமாக கலாய்த்து விளாசி வந்தவர் யார் என கண்டுபிடித்து விட்டதாக அவரது கணவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, அனைவரின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். லக்ஷ்மி குறித்து மிகவும் மோசமாக கமெண்ட் செய்தவர்கள் குறித்த தகவலை கண்டுபிடித்தபிறகுதான் இங்கு வரவேண்டும் என நினைத்தேன்.

சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சைபர் செல் மற்றும் நாங்கள் அணுகிய ஏஜென்சியிடமிருந்து சரியான ஆதாரம் கிடைத்துள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணனை தாக்கி அவரது ஒவ்வொரு பதிவிற்கும் மோசமான கருத்துக்களை கமெண்ட்ஸ் செய்து வரும் சில ட்விட்டர்கள் ஒரே லொகேஷனிலிருந்து ஹேண்டில் செய்யப்படுகிறது.

மேலும் அனைத்தையும் ஒரே நபரே ஹேண்டில் செய்கிறார் என்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல. எங்களது குடும்ப உறவினர் ஒருவர்தான் அவ்வாறு செய்து வந்துள்ளார்.

அவர் மீது எங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. தற்போது ஏஜென்சி மூலம் ஆதாரம் கிடைத்துவிட்டது.

கிரிமினல் புத்தியுள்ளவர்களை நல்லவர்களாக்க கல்வி உதவவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த லக்ஷ்மியின் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Dhinasari News – Vellithirai News

%d bloggers like this: