
பாடகி சுனிதா தெலுங்கில் மிகவும் பிரபலமானவர். இவருடைய குரலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பாடகர் மட்டுமின்றி சிறந்த டப்பிங்க் கலைஞரும் கூட.
இவர் தமிழில் ‘காதல் ரோஜாவே’ படத்தில் இளையராஜா இசையில் ‘நினைத்த வரம்’ என்ற பாடலையும், ‘பத்ரி’ படத்தில் ‘காதல் சொல்வது உதடுகள் இல்லை’ பாடலையும் பாடியுள்ளார்.
தற்போது பாடகி சுனிதா ஒரு இயக்குனருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த இயக்குனரின் பேச்சும் செயல்களும் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஒரு படத்திற்கு டப்பிங் பேச நான் ஒரு டப்பிங் ஸ்டுடியோவுக்கு சென்றேன். நான் உள்ளே நுழைந்தவுடன், படத்தின் இயக்குனர் ‘சுனிதா மேம், நான் உங்களுடைய பெரிய ரசிகன்.
இன்று நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார். மேலும் எனது படத்தில் நீங்கள் பணியாற்றுவது என் அதிர்ஷ்டம் என்கிறார்.
பின்னர் நான் சில காட்சிகளுக்கு டப்பிங் பேசிய உடன் சுனிதா காரு என்ற அழைக்கத் தொடங்கினார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் என்னை ‘சுனிதா’ என்று அழைக்கத் தொடங்கினார். பின்னர், நான் எனது வேலையை முடித்த பிறகு அம்மா, புஜ்ஜி, கண்ணா என்றவாறு அழைக்கத் தொடங்கிவிட்டார். எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வந்த போது மரியாதையுடன் பேசிய அவர் சிறிது நேரம் கழித்து எனக்கு செல்லப் பெயர் வைத்து கூப்பிடத் தொடங்கியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு நான் நீண்ட நேரம் மவுனமாக இருந்தேன்.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரை ஒரு போதும் சந்திக்கவில்லை” என்று தெரிவித்தார். சுனிதா குறிப்பிட்ட அந்த இயக்குனர் யார்? என்ற பரபரப்பு டோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Related
Source: Dhinasari News – Vellithirai News