
நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”வணக்கம் மக்களே..நான் நடிக்கல..உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். ஜெயிக்கணும்னு எப்பவுமே நான் பாசிடிவாவே இருப்பேன். ஆனா, எனக்கே கொரோனான்னு பாசிடிவ் வந்துருச்சு.
கொரோனா குருமான்னு அலட்சியமா இருந்த எனக்கே இப்போது கொரோனா வந்துருச்சு. என் வீட்டுல நான் தனியாக இருக்குறேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் இருக்குறாங்க.
சாப்பாடு கொடுக்க மட்டும் மனைவி வருவார். கொரோனா ரொம்ப டேஞ்சரஸ். பாதுகாப்பாக இருங்க” என்று சொல்லி இருக்கிறார்.
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply