[prisna-google-website-translator]

வைரமுத்து இந்தியாவின் ஹார்வி வெய்ன்ஸ்டீன்: பட்டமளித்த பாடகி!

Vairamuthu 1
Vairamuthu 1

கடந்த இரு வருடங்களாக வைரமுத்து – சின்மயி இடையேயான மோதல் நடந்து வருகிறது. இதற்கு முடிவே இல்லாமல் போயிக்கொண்டிடுக்கிறது.

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுக்கப் போவதும் இல்லை, தன்னை அவமானப் படுத்துவதாக சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கும் தொடரப் போவதும் இல்லை.

இந்த நிலையில், கேரள அரசு இலக்கியத்திற்கான உயரிய விருதை வைரமுத்துக்கு அறிவித்திருந்து.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்மயி பாலியல் குற்றம் உள்ள ஒருவருக்கு எப்படி இந்த விருதை அளிக்கலாம் என குற்றம் சாற்றினார்.

chinmayee
chinmayee

தவறை உணர்ந்த கேரள அரசு விருது வழங்குவது குறித்து பரீசிலனை செய்யப்படும் என கூறியது.

கொடுக்காத விருதை திருப்பிக் கொடுத்து, கிடைக்காத பணத்தை நிவாரணநிதிக்கு எனக்கூறி பெருமைக் தேடிக் கொள்ள முயன்றார் வைரமுத்து.

சமீபத்தில் பேசிய சின்மயி, “வைரமுத்து இசை நிகழ்வு ஒன்று நிறைவடைந்த பின்னர் கவிதைகளால் வர்ணித்தார். உன் உதடு சிகப்பாகவும் எடுப்பாகவும் உள்ளது, சுவைப்பார்க்க தோன்றுகிறது தொட்டுப் பார்க்கவா” என கேட்டதாக கூறியுள்ளார்.

chinmayee
chinmayee

இதனை தொடர்ந்து தான் வைரமுத்துவை முறைத்த போது காமெடி கலந்த கவிதை என கூறி சிரித்ததாகவும் இதனை அன்று சின்மயி உணரவில்லை எனவும் கூறியுள்ளார்.

வைரமுத்து இந்தியாவின் ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஊடகங்களில் பலராலும். அரசியல்வாதிகளாலும் ஆதரிக்கப்படுகிறார், சினிமாதுறையிலும் சில பெண்கள் மற்றும் சில ஆண்களால் ஆதரிக்கப்படுகிறார். அவருக்கு பிடித்த பாலியல் வேட்டையாடலைப் பாதுகாக்க ஒரு முழு இன்டஸ்டிரியே மாறி மாறி மாறி மாறி ஆதரிக்கிறது.

மேலும் அவர் ஹார்வி வெய்ன்ஸ்டீனைப் பற்றிய நூலை மேற்கோள் காட்டி இதில். ஹார்வியின் முகத்தை திரு வைரமுதுவுடன் மாற்றவும். ஒபாமாவின் முகத்தை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் அரசியலில் உள்ள பல ஆண்கள் மற்றும் பெண்களுடன் மாற்றவும்.
என கூறியிருக்கிறார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply