கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருந்த காரணத்தினால் அதிகமாக சினிமாவில் கவனம் செலுத்தாத முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் சினிமாவில் காலடியை மீண்டும் எடுத்து வைக்க வேகம் காட்ட துவங்கியுள்ளனர்.
முதல்வர் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி தற்போது, மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நண்பாதே’ படத்தில் நடித்து வருகிறார்.
ஊரடங்கால் படப்பிடிப்பு நின்று போய் உள்ளது. இன்னும் 15 நாட்கள் படபிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. அடுத்து இந்தியில் வெளிவந்த ‘ஆர்டிகிள் 15’ படத்தின் ரீ-மேக்கில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
20 சதவீதம் முடித்துள்ளனர். இதற்கு முன்பு மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். அந்த படமும் 80 சதவீதம் முடித்துவிட்டது. சிறு பணிகள் முடிந்தால் அதுவும் வெளியீட்டுக்கு தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதியின் மனைவியான மனைவி கிருத்திகா, வணக்கம் சென்னை , காளி போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்பொழுது நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் வைத்து புதுப்படம் தொடங்க உள்ளார்.
உதயநிதியின் தம்பியான அருள்நிதி நடிக்கும் இரண்டு படமும் உள்ளது. மேலும் மு.க.அழகிரியின் மகன் முன்பு தி.மு.க ஆட்சி காலத்தில் ‘க்ளவுட் நைன் மூவிஸ்’ என்ற நிறுவனத்தில் படங்களை தயாரித்து வந்தார்.
தற்பொழுது தயாரிப்பில் மீண்டும் இறங்குவார் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையே கொரோனாவால் முடங்கி போன படங்களை விலை கொடுத்து வாங்கி தனியார் டிவியில் வெளியிடவும் பேச்சு வார்த்தை நடக்கிறது. இப்படியாக ‘நிதி’ வகையறாக்கள் மீண்டும் தமிழ் திரையுலகில் நிதி தழைக்க ஆட்டத்தை துவங்கி விட்டனர்.