
கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
தற்போது சிண்ட்ரல்லா எனும் படத்தில் துளசி என்ற ஏழை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை ராய் லட்சுமி அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஊசி போட்டுக்கொள்ளும் குழந்தை போல நடுங்கி இறுதியில் அழுதே விடுகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply