[prisna-google-website-translator]

அதிர்ச்சி: இசையமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை!

Murali chithra - 1

வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள இசை அமைப்பாளர் முரளி சித்தாரா. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்காவு பகுதியில் உள்ள தோப்புமுக்கு பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அவர் உடலை இறக்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு வயது 66. அவருடைய இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. இதுகுறித்து வட்டியூர்காவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட முரளி சித்தாராவுக்கு மனைவி ஷோபனா குமாரி, மிதுன் முரளி மற்றும் விபின் ஆகிய மகன்கள் உள்ளனர்.

மறைந்த முரளி சித்தாரா, 1987 ஆம் ஆண்டு ‘தீக்காட்டு’ என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். சிறந்த வயலின் இசைக் கலைஞரான இவர், 90 களில் பல மலையாளப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கே.ஜே.யேசுதாஸின் இசைப்பள்ளியில் கர்நாடக இசை பயின்றவர். அவர் தனது பாடல்களில் அதிகம் கே.ஜே.யேசுதாஸையே பாட வைத்தார்.

அவருடைய அறிமுகப் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கோடி ஸ்வப்பனங்கள்’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டான ஒன்று. 1991 ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் அனைத்திந்திய ரேடியாவில் இணைந்தார். அங்கு மூத்த இசை அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply