
கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் ரேகா.
இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் தடம் பதிக்க விரும்பிய ரேகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவராலும் அடையாளம் காணப்பட்டார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேகா தனது பெண்ணுடன் இருக்கின்ற புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றார். ரேகாவை போலவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அவருடைய மகள் அனுஷாவை விரைவில் திரையில் பார்க்க வேண்டும் என்று ரேகாவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply