தனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்

selva ragavan

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் நடிகர் தனுஷை நடிகராக மாற்றியவரே செல்வராகவன்தான். அவர் கொடுத்த பயிற்சியில்தான் தனுஷ் இந்த உச்சத்தை அடைந்துள்ளார். இதை அவரே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.

புதுப்பேட்டைக்கு பின் தனுஷும், செல்வராகவனும் இணைந்து படம் பண்ணவில்லை. தற்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. செல்வராகவன் தம்பிக்காக கதையை உருவாக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்கவுள்ளது.

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், மற்றும் ஹிந்தி படமான அட்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களையும் முடித்துவிட்டு அண்ணன் படத்தில் தனுஷ் நடிக்க செல்வார் என கருதப்படுகிறது.

Leave a Reply