
வலிமை’ பட இறுதிகட்ட பைக் ரேஸ் சேசிங் காட்சிக்காக ரஷ்யா சென்ற அஜித் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யா’வில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே சமூக வலைதளத்தில் அதிகம் பேர் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் என்றால் அது ‘வலிமை’ மட்டுமே!
இதுவரை படத்தின் போஸ்டர்கள், மற்றும் முதல் சிங்கிள் பாடல் மட்டுமே வெளியான நிலையில் மீதமிருக்கும் ஒரு சண்டை காட்சியை முடிக்க படக்குழு கடந்த மாதம் ரஷ்யா பயணமானது.

இறுதிகட்ட பைக் ரேஸ் சேசிங் காட்சியை முழுவதும் படமாக்கிய அஜித்குமார் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
Related
Source: Dhinasari News – Vellithirai News