நடிகர் அஜித் வீட்டு முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா.
கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மருத்துவமனைக்கு பிரபல நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை சந்திக்க நடிகர் அஜித் வந்துள்ளார்.
அப்போது மருத்துவரின் உதவியாளராக பணியாற்றிய பர்ஷானா ஆர்வ மிகுதியால் நடிகர் அஜித்தை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து அந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனை தொடர்ந்து பர்ஷானாவை அப்போலோ நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பர்ஷானா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இதன்பின்னர் தான் வீடியோ எடுத்தது தொடர்பாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பர்ஷானா, தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனாலும் அப்பல்லோ நிர்வாகம் அவரை வேலையில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி கேட்டுக் கொண்டதன் விளைவாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஏதோ பிரச்சினையால் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கும் அஜித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் அஜித்தின் மேனேஜரிடம் அஜித் தனக்கு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். பர்ஷானாவின் குழந்தைகள் படிப்பிற்காக ஒருத் தொகையை பள்ளியில் கட்டுவார் என மேனேஜர் கூறியும் கேட்காத பர்ஷானா அத்தொகையை தன் கையில் கேட்டுள்ளார். அஜித் எப்பொழுதுமே உதவிகளை நேரிடியாக செய்து பழக்கம் உள்ளவர். இது போன்ற பழக்கம் இல்லை என மேனேஜர் தெரிவித்தும் கேட்கவில்லை பர்ஷானா.
இந்த நிலையில் பர்ஷானா, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜுத் வீட்டுக்கு முன்பு வந்தார்.
இதனை தொடர்ந்து அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த போலீசார், பர்ஷானாவை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். எதுவாக இருந்தாலும் சட்டப்படி புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் அவரிடம் கூறினார்கள்.
அதற்கு பர்ஷானா, நடிகர் அஜித்தால் எனது வாழ்க்கையே பறிபோய் விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடிகர் அஜித்ததை பார்க்காமல் இங்கு இருந்து செல்ல மாட்டேன். நான் சாக முடிவெடுத்ததற்கு அவர் காரணம்” என்று கூறினார்.
ஒருமுறை வேலையில் சேர்க்க கோரி, பணியை வாங்கி கொடுத்தும், பின் தன் தவறு இல்லாத பொழுதும் பிள்ளைகள் படிப்பிற்காக பணம் தருவதாகக் கூறியும், அதனையும் மறுத்து இவ்வாறு பணம் பறிக்கும் நோக்கத்திலும் அஜித்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்குடனும் அந்த பெண் தொடர்ந்து நடந்து கொள்வது பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.