திருமணத்தை விட விவாகரத்தை தான் அதிகம் கொண்டாட வேண்டும் என்று பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா ” திருமணத்தை விட விவாகரத்து தான் கொண்டாடப்பட வேண்டும், ஏனென்றால் திருமணத்தில், நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, அதேசமயம் விவாகரத்தில் நீங்கள் பெற்றதில் இருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள்.
திருமணங்கள் நரகத்திலும், விவாகரத்துகள் சொர்க்கத்திலும் நிச்சயிக்கப்படுகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் திருமணங்களில் சங்கீத் விழாவை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. பெரும்பாலான திருமணங்கள் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. எ
னவே விவாகரத்து செய்யப்பட்ட அனைத்து ஆண்களும் பெண்களும் ஒரு விவாகரத்து நிகழ்வில் உண்மையான சங்கீத் விழாவை ஆடியும், பாடியும் கொண்டாட வேண்டும்”என்றும் பதிவிட்டுள்ளார்.
நட்சத்திர ஜோடியான சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
DIVORCE should be more celebrated than MARRIAGE because in marriage , u don’t know what u are getting into, whereas in divorce u are getting out of what u have gotten into💐 https://t.co/87HKdcAQ6L via @YouTube
— Ram Gopal Varma (@RGVzoomin) October 2, 2021
MARRIAGES are made in HELL and DIVORCES are made in HEAVEN 😍
— Ram Gopal Varma (@RGVzoomin) October 2, 2021
Most marriages don’t last more than even the no. of days they celebrate the event ,and so real Sangeeth should happen at a DIVORCE event where all divorced men and women can sing and dance
— Ram Gopal Varma (@RGVzoomin) October 2, 2021