[prisna-google-website-translator]

சரித்திர கால செந்தமிழில் டப்பிங் பேசிய த்ரிஷா!

thirsha 1
thirsha 1

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்னும் சரித்திர படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பலநகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது.

இந்தபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வரஇருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன, வானவன்மாதேவியாக இந்த படத்தில் நடிக்கும் நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான வித்யாசுப்ரமணியன் இந்த படத்திற்கான டப்பிங் பேசும் பணிகளை முதன் முதலாக தொடங்கினார்.

அவரைத்தொடர்ந்து குந்தவையாக நடிக்கும் நடிகை திரிஷா தற்போது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் உள்ள திரிஷா, மங்காத்தா உள்ளிட்ட ஒரு சில படங்களுக்கு மட்டுமே அவரது குரலில் டப்பிங் பேசி உள்ளார்.

பொன்னியின் செல்வனில் சரித்திர கால தமிழில் பேச வேண்டி இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பயிற்சி எடுத்து பேசி மணிரத்னத்தை அசத்தியுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply