புனீத் ராஜ்குமார் – கன்னடத்தின் ரியல் சூப்பர் ஸ்டார் – 26 அனாதை இல்லங்கள்
25 நடுத்தர மாணவர்களுக்கான பள்ளிகள்
16 முதியோர் இல்லங்கள்
19 பசு காப்பகங்கள்
1800 மாணவர்களுக்கு இலவசக் கல்வியளிக்க, “ஷக்திதாமா” எனும் பெயரில், மைசூரில் பெரும் கல்விக்கூடம்-மாணவிகளுக்கு இலவச விடுதி – நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள், இந்நாட்டின் குடிமகன்கள் எனும் முறையில், எல்லோருக்கும்தான், சந்திக்க நேரம் வழங்குகிறார். பேதங்களின்றி கௌரவிக்கிறார்.
ஆனால், “மோடி எனும் மஹரிஷியின் மனதில் நிரந்தரமான அன்பையும், ஆசியையும் பெற்றிட, புனீத் போன்றோரால் மட்டுமே முடியும். இங்குள்ளத் தமிழ்நடிகர் அனைவரும் ஒன்றினை மறந்துவிட வேண்டாம், புனீத்தின் தந்தை ராஜ்குமார் ஓர் தமிழர்.
புனீத் உட்பட, அவரது சகோதரர்கள் சிவராஜ், ராகவேந்திரா என அனைவரும் படித்து வளர்ந்தது, சென்னையில். – இத்தகையப் புண்ணியமான தேசச் சேவைச் சிந்தனைச் செயல்கள் யாவும், பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்து வாராது. இரத்தத்தில் இருந்துப் புறப்படவேண்டும்.