தமிழில் வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நிகிலா விமல். அழகான மற்றும் திறமையான நடிகை ஆவார். அவரது தாய் மொழியான மலையாளத்திலும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் தந்தை பவித்ரன் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும், திரையுலகினரும் நிகிலா விமலுக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.