மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகர் மதன் பாபு, இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார்.
1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் நீங்கள் காமெடி நடிகராக அறிமுகம் ஆன இவர், வானமே எல்லை, காட்ஜி மல்லி, தேவர் மகன், ஹான்ஸ்ட் ராஜ், திருடா திருடா, பூவே உனக்காக என 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
காமெடி நடிகர் மதன் பாபுவின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. ஒரு இசைக்கலைஞரான இவர், ஆஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
தமிழில் மொத்தமாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு ஜனனி கிருஷ்ணமூர்த்தி என்ற மகள் ஒருவர் உள்ளார்.
இவர் தனது தந்தையியிடம் இருந்து முறையாக இசை கற்றுக் கொண்டுள்ளார். தற்போது சிறந்த பாடகராக திகழும் இவரது மகள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பாடியுள்ளார்.
100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவரது மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.