[prisna-google-website-translator]

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடலாசிரியர் மரணம்! பிரதமர் இரங்கல்!

seetharama sasthri - 1

தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் சீதாராம சாஸ்திரி. மூன்றாயிரம் திரைப் பாடல்களுக்கு மேல் பாடல் வரிகளை எழுதிய சீதாராம் சாஸ்திரி பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

11 நந்தி விருதுகளையும், நான்கு பிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இவர் உடலநலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த சீதாராம சாஸ்திரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவால் தெலுங்கு திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

seetharama sasthri 1 - 2

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வரும் ஜனவரி 7ம் தேதிக்கு வெளியாக உள்ள RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தோஸ்தி எனும் பாடலை பழம்பெரும் பாடலாசிரியரான சீதாராம சாஸ்திரி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாஸ்திரியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் சிறிவெண்ணெல சீதாராம சாஸ்திரி என பதிவிட்டுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply