ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே கவனம் ஈர்த்துள்ளது. 2022 பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது.
படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் அளித்தப் பேட்டியியில் அஜித்துடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுதான் நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது. இந்தக் கதையின் வேறொரு வடிவத்தை நான் முதலில் எழுதியிருந்தேன்.
அப்போது அது ஒரு போலீஸ் கதையாக இருக்கவில்லை. இன்று நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் பார்க்கிறோம்.
இன்று இருக்கும் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். அதுபோன்ற இரண்டு பிரச்சினைகளை நான் எடுத்துக் கொண்டேன்.
அந்தப் பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் அந்தக் கதை.
இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு புதிய கதையாக மாற்றியிருக்கிறேன். என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவித சமரசமும் செய்யவில்லை.
என்னைப் போன்ற இயக்குநர்கள் ஒரு பெரிய ஸ்டாருடன் பணியாற்றும்போது பார்வையாளர்களுக்காக எடுக்கும் படத்தில் போடும் உழைப்பில் 10 சதவீதத்தைக் கொடுத்தால் போதும். ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்களே கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள்”.
அஜித்தைப் பொறுத்தவரை இயக்குநர் அவரிடமிருந்து ஒரு விஷயம் வேண்டுமென்று நினைத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்.
எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு அவர் தயாராக இருப்பார்.
அவரது கதாபாத்திரத்தை எப்படி வேண்டுமானாலும் எழுதக்கூடிய சுதந்திரத்தையும் அவர் கொடுப்பார். இந்தப் படத்துக்காக அவர் முடிந்த அளவு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்
அதில், ”வலிமை’ படத்தில் அஜித் சார் ஒரு குடும்பத்தின் மகனாக நடிப்பதால், அவரது தலைமுடியை கருப்பு நிறத்திலேயே வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் கதைக்காக புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.
படத்தில் அவரது கதாபாத்திரம் புத்திசாலித்தனமானது; நுட்பமானது.’வலிமை’ கதையை முதலில் எழுதும்போது ஹீமா குரேஷியின் கதாபாத்திரத்தை காதல் கதாபாத்திரமாகத்தான் எழுதினேன்.
பின்பு, கொரோனா சூழலில் கதை மாற்றப்பட்டதால் விசாரணை அதிகாரியாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்’ என்றவர், ‘
அஜித் 61′ படத்தின் அப்டேட்டையும் பகிர்ந்துகொண்டுள்ளார். ‘அடுத்தப்படத்தில் அஜித் சாருக்கு ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும் வசனங்கள் அதிகம் பேசும்படியும் காட்சிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’
உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி அப்படம் பேசும்”.
என உற்சாகமுடன் கூறியுள்ளார்.